Monday, March 12, 2018

5V Regulator Board


Maximum 40v to 5v convert
Use for 5v remote kit , USB board's 

DC Power Supply PCB


DC Power Supply


Speaker Protection Board


Paramesh
24v AC & 24v DC input supply
Delay time to start 

Speaker Protection Board


G-tech
12v single supply
Delay time to start
If any short circuit speaker line will be cut 

அட்மாஸ், ஆரோ 3டி, 4k... திரையரங்குகளும் புதிய தொழில்நுட்பங்களும்.

நன்றி : விகடன்
இப்போதெல்லாம் வாரம் முடிந்தால் ரிலாக்ஸ் செய்ய பெரும்பாலும் பலர் தியேட்டரையே தேர்வு செய்கின்றார்கள். பாகுபலி மாதிரியான ஒரு பெரிய படம் கண்டிப்பாக ஊருக்கு இரண்டு திரையரங்கிலாவது ரிலீஸ் ஆகும். சென்னையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அதனால் ரசிகனுக்கு என்ன படம் பார்ப்பது என்பதில் இருக்கும் குழப்பதைவிட எங்கு பார்ப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக உள்ளது. குடும்பத்துடன் செல்பவர்கள் நல்ல தொழில்நுட்பத்தைவிட நல்ல சூழலையே எதிர்பார்கின்றனர். மற்றவர்கள் கொடுத்த பணத்திற்கான தரத்தையே எதிர்பார்கிறார்கள். ஆனால் அந்தத் தரம், தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள பெரிதாக யாரும் முனைவதில்லை. முக்கால்வாசி பேருக்கு ’காரசிங்கம் ஏ/சி’ காமெடி போல் தியேட்டர் பெயருக்கு பின் எதாவது அடைமொழி இருந்தால் போதும். அட்மாஸ், ஆரோ 3டி, 4k இன்னும் ஏராளமான அடைமொழிகள் தியேட்டர்களுக்கு உண்டு. அவை என்ன?
டால்பி அட்மாஸ்
மாநகர தியேட்டர்கள் பலவற்றுக்கு பின் டால்பி அட்மாஸ் என்ற அடைமொழியை பார்க்கலாம். சமீபகாலமாக, சென்னை என்று இல்லாமல் மதுரை, ஆலங்குளம்வரை அட்மாஸ் ஊடுருவி வந்துவிட்டது. 
தொடக்க காலத்தில் படங்களுக்கு ஒலி ‘மோனோ’ (mono) தொழில்நுட்பத்தில்தான் வெளிவந்தது. அதாவது ஒரே சவுண்ட் சேனல்தான் பல்வேறு ஸ்பீக்கர்களுக்கு செல்லும். பின்பு 'ஸ்டிரியோ'(stereo) தொழில்நுட்பம் வந்தது. இதில் இடது, வலது என இரு சேனல்கள் இருந்தன. வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு வலது சேனல் ஒலியும் இடதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடது சேனல் ஒலியும் அனுப்பப்பட்டது. பின்பு Surround தொழில்நுட்பங்கள் வர ஆரம்பித்தன. டிடிஎஸ் (DTS), டால்பி டிஜிட்டல், ஆர்டிஎக்ஸ் (RDX) போன்றவை சில உதாரணங்கள். இதை அறிமுகப்படுத்தியது டிடிஎஸ்(DTS) தான். மேலே கூறப்பட்டிருக்கும் மற்ற சரவுண்ட் தொழில்நுட்பங்கள் இதற்குப் போட்டியாக அரம்பிக்கப்பட்டதே. இதில் வலது, இடது சேனல்கள் சேர்த்து சரவுண்ட் சேனல்கள் இருக்கும். இது இயற்கை சத்தங்கள், வாகன சத்தங்கள் போன்று காட்சியில் நடக்கும் பல சரவுண்ட் ஒலிகளை கொண்டு இருக்கும். இந்த சேனல்களில் இருந்து ஆடியோ தியேட்டரின் பின் பக்கம் இருக்கும் சரவுண்ட் ஸ்பீக்கர்களுக்கு லெப்ட், ரைட் என அனுப்பபடும். அது நமக்கு காட்சி நடக்கும் இடத்தில் இருக்கும் உணர்வைதர முயற்சிக்கும். ரைட், லெப்ட், சென்டர், சரவுண்ட் லெப்ட், சரவுண்ட் ரைட், வுஃபர் என்று 5+1 சேனல்கள் இருப்பதால்தான் இதை 5.1 என்று கூறுவர்.
இதில் மிகவும் அட்வான்ஸ் அட்மாஸ் தொழில்நுட்பம். கிட்டத்தட்ட 64 சேனல்களை கொண்டது அட்மாஸ். இவை அனைத்திலும் வேறு வேறு ஒலி இருக்கும். இவை தலைக்கு மேல் இருக்கும் ஸ்பீக்கர்கள், தரையில் இருக்கும் ஸ்பீக்கர்கள் என தியேட்டரின் அனைத்து பகுதிகளில் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கும் அந்த இடத்திற்கான பிரத்யேக சேனல் ஒலியை அனுப்பும். இதனால் ஹெலிகாப்டர் பார்க்கும் சீன் என்றால் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் தலைக்கு மேலும் தண்ணீர் போகும் சத்தம் காலுக்கு கீழ் கேட்கும் உணர்வை தரவல்லது அட்மாஸ். அட்மாஸ்பியர்(atmosphere) என்பதே அட்மாஸ் பெயர்க்காரணம்.
ஆரோ 3டி
இது அட்மாஸ்க்கு முந்தையே தொழில்நுட்பம் என்று கூறலாம். இதில் 11+1 சேனல்கள் உண்டு (இப்போது கூடுதலாகவும் வருவதுண்டு). இவை சரவுண்ட் மட்டும் அல்லாமல் காதுக்குமேல் கேட்கும் ஒலியையும், கீழ் கேட்கும் ஒலியையும் வித்யாசப்படுத்தவல்லது. இதை ஆடியோவில் 3டி என்றே கூறலாம். அதனால்தான் ஆரோ 3டி. தமிழில் விஸ்வரூபம் படம் மூலம் அறிமுகமானது.
வீடியோவில் 3டி போன்று ஆடியோவில் ஆரோ 3டி என்றால் ஆடியோவில் விர்சுவல் ரியாலிட்டி டால்பி அட்மாஸ் என்று சொல்லலாம்.
7.1
இது 5.1க்கு ஒருபடி மேலே சென்று 2 சேனல்கள் கூடுதலாக சேர்த்து, மற்றும் ஒரு கோணத்தை ஆடியோவுக்குச் சேர்த்தது. இது பீட்சா படம் மூலம் தமிழுக்கு வந்தது. ஆரோ 3டிக்கு முந்தைய தொழில்நுட்பம் இது.
இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பங்கள் இருப்பது மட்டும் நல்ல அனுபவத்தை தர போதாது. படங்களும் இந்த தொழில்நுட்பத்தில் சரியாக மிக்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும். இன்று பெரும்பான்மை படங்கள் அட்மாஸில் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் முழு திறனையும் அவை பயன்படுத்துகின்றனவா என்பது கேள்விக்குறிதான். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மிக்ஸ் செய்வதால் முக்கால்வாசி படங்கள் பெயரளவில்தான் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. 
4k, 2k
இவை ஒளி சமந்தப்பட்டது. இது நாம் சாதாரணமாக கூறும் HD மாதிரியான ரெசொல்யூசன்தான். 1080p யை விட 4 மடங்கு பெரியது தான் 4k(4096 x 2160). இப்போது எல்லாப் படங்களும் 4kவில் தான் வெளியாகின்றன. 2k ரெசொல்யூசன் 1080pயை விட இரண்டு மடங்கு என்று சொல்லலாம். தமிழகத்தில் பாதிக்கும் மேல் தியேட்டர்கள் 2k ப்ரொஜெக்டர் தான் பயன்படுத்துகின்றனர். 
டூயல் ப்ரொஜெக்ஷன் (Dual projection)
இதை சில தியேட்டர்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். இரண்டு ப்ரொஜெக்டர்கள் கொண்டு படம் ஒளிபரப்படுவதே இத்தொழில்நுட்பம். இது வீடியோவின் டெப்த்தை அதிகரிக்கும். அதனால் வீடியோ மிகவும் தெளிவாக இருக்கும்.
கியூப்(Qube), பிஎக்ஸ்டி(PXD), UFO போன்ற அடைமொழிகள் தியேட்டரில் படங்கள் எந்த டிஜிட்டல் டிஸ்டரிபூஷன் நடைமுறையில் ஒளிபரப்புகின்றன என குறிப்பிடும். 

இப்படி தொழில்நுட்பங்கள் பல இருக்க உங்கள் ஊர் தியேட்டரில் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்துகொண்டு படங்களை ரசிக்கலாம். அது நமது அனுபவத்தை கூடுதல் சுவாரஸ்யம் ஆக்கும்.

5.1 ஹோம் தியேட்டர் அசெம்பல் - ரிமாேட் கன்ட்ராேல்

5.1  ஹோம் தியேட்டர் முற்றிலும் அசெம்பல் செய்யப்பட்டது. 
முற்றிலும் ரிமாேட்  மூலம் இயங்கும் விதத்தில் வடிமைக்கப்பட்டதது.
மாஸ்பிட் ஐசி 7294 -  5x100W, 5200 - 1x400W வாட்ஸ் ஒலியை காெடுக்கும்.


இந்த 5.1 ல் பெண்டிரைவ், மெம்மரி கார்டு,  டிவி


டி, DTH அல்லது குறைந்தபட்ச ஸ்டீரியோ ஆடியோ வெளியீடு கொண்டிருக்கும் எந்த ஆடியோவையும்  இணைக்க முடியும்.
வீடு, அலுவலகம், வேலை செய்யும்  இடம், வீட்டில் திரையரங்கு ஒலி அமைப்பு தேவைபடும்  நபர் அனைவரும் கேட்டு மகிழலாம்.
உங்களுக்கு வீடியோ வெளியீடு சேர்க்க வேண்டும் என்றால் 550/-.
புளுடூத் ஆடியோ சேர்க்க 300/-
இது இரட்டை மின்சாரம் மூலம் செய்யப்பட்டது எனவே எந்த விலகல் ஒலியை கொடுக்க முடியாது.
நீங்கள் 4" முதல்  8" வரை ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம்.
இதை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தொடர்பு கொள்ள 8124959706.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஆடரின்  பெயரில்
செய்து  காெடுக்கப்படும்

5.1  ஹோம் தியேட்டர் முற்றிலும் அசெம்பல் செய்யப்பட்டது.

5.1  ஹோம் தியேட்டர் முற்றிலும் அசெம்பல் செய்யப்பட்டது.  உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு  STK ஐசி அல்லது மாஸ்பிட் ஐசி ஆடரின் பெயரில் செய்து கொடுக்கப்படும்.  300w முதல் 1200 வரை  பயன்படுத்தலாம். 
இந்த 5.1 ல் பெண்டிரைவ், மெம்மரி கார்டு,  டிவிடி, DTH அல்லது குறைந்தபட்ச ஸ்டீரியோ ஆடியோ வெளியீடு கொண்டிருக்கும் எந்த ஆடியோவையும்  இணைக்க முடியும்.
வீடு, அலுவலகம், வேலை செய்யும்  இடம், வீட்டில் திரையரங்கு ஒலி அமைப்பு தேவைபடும்  நபர் அனைவரும் கேட்டு மகிழலாம்.
உங்களுக்கு வீடியோ வெளியீடு சேர்க்க வேண்டும் என்றால் 550/-. 
புளுடூத் ஆடியோ சேர்க்க 300/-
இது இரட்டை மின்சாரம் மூலம் செய்யப்பட்டது எனவே எந்த விலகல் ஒலியை கொடுக்க முடியாது.
நீங்கள் 4" முதல்  12" வரை ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம்.
இதை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தொடர்பு கொள்ள 8124959706.